ADDED : ஆக 08, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் முன்பு, மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் த லைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், ஸ்டீபன் ராஜ், தண்டபாணி, ஏழுமலை, தேவராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், சுப்புராயன், ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன், பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பழனிவேல் கண்டன உரையாற்றினர்.
பீகாரில் 65லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பக்கிரான் நன்றி கூறினார்.