ADDED : மார் 27, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை தாங்கினார். கல்வி அலுவலர்கள் நடராஜன், கோமதி, மேற்பார்வையாளர் இளவரசன், கவுன்சிலர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் பூங்குழலி வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியர் ரமா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் கோதைநாயகி, அனுராதா, இலக்கியா, ஒலிவட்மேரி ஜாஸ்மின், சூர்யா, செந்தில்குமார், கண்ணன், சித்ரா, மேலாண்மை குழு தலைவி மணிமேகலை, உதயபானு பங்கேற்றனர்.