தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொலை மிரட்டல் : ஒருவர் கைது

கொலை மிரட்டல் : ஒருவர் கைது

கொலை மிரட்டல் : ஒருவர் கைது


ADDED : அக் 24, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மதுபோதையில் சகோதரர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலத்தை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மகன்கள் கண்ணன், 50, நவநீதம். இருவரும் நேற்று மாலை 5:00 மணியளவில் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டனர். முல்லாதோட்டம் வழியாக வந்தபோது எதிரே மதுபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜன் மகன் சுதாகர், 48, என்பவர் வழிமறித்து, இருவரையும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

அதில் படுகாயமடைந்த கண்ணன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சுதாகரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us