UPDATED : அக் 24, 2026 01:22 AM
ADDED : அக் 24, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: தம்பதியை தாக்கிய, மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புவனகிரி சுவிகார எடத்தெருவை சேர்ந்தவர் குமார். இவர், வீட்டின் முன்பு அதேபகுதியை சேர்ந்தவர் விஜயன், கடந்த 20ம் தேதி செங்கல்லை எடுத்து எரிந்தார். அதை குமார் கண்டிக்கவே இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, விஜயன், அவரது தாய் மலர், மனைவி புனிதா மூவரும் சேர்ந்து குமாரையும், அவரது மனைவி கோவிந்தாம்பாளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விஜயன் உள்ளிட்ட மூவரை தேடிவருகின்றனர்.
