ADDED : அக் 24, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுவாதி,19; இவர், வடலுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் அறிவியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற சுவாமி, மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஷீலா அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, சுவாதியை தேடிவருகின்றனர்.
