ADDED : ஆக 20, 2025 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு. முட்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அதிவராகநல்லூர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் பிரதாப் (பொறுப்பு) தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் லோகேஸ்வரி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு கை கழுவும் முறைகள், தன் சுத்தம், கழிவறைகளை பயன்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், கிராம சுகாதார செவிலியர் கிருபாலக்ஷ்மி, சுகாதார ஆய்வாளர் ரிச்சர்ட் எட்வின் ராஜ், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் தேவிபிரியா நன்றி கூறினார்.