ADDED : மார் 27, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி நடைமுறைகள் குறித்த 3 நாள் தேசிய பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது.
பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர் மற்றும் பேராசிரியர் விஜய் வரவேற்றார். துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கினார். தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை பதிவாளர் சண்முகசுந்தரம் துவக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் வாழ்த்துரை வழங்கினார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.