/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நவராத்திரி நிறைவு விழா துர்கையம்மன் சிலை கரைப்பு
/
நவராத்திரி நிறைவு விழா துர்கையம்மன் சிலை கரைப்பு
ADDED : அக் 13, 2024 07:31 AM

கடலுார் : நவராத்திரி நிறைவு விழாவையொட்டி கடலுார் சில்வர் பீச்சில் துர்கையம்மன் சிலை கரைக்கப்பட்டது.
கடலுாரில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு சமாஜ் சமூகத்தினர் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை துர்கா பூஜையாக கொண்டாடி வருகின்றனர்.
நவராத்திரி துவங்கியது முதல் துர்கையம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜை செய்தும், பாட்டு பாடியும், நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.
நவராத்திரி நிறைவுநாளில் துர்கையம்மன், விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின் அலங்கரிக்கப்பட்ட துர்கையம்மன் சிலையை ஊர்வலமாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது விஷ்ணு சமாஜ் சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர். பின் துர்கையம்மன் சிலையை படகில் எடுத்துச்சென்று கடலில் கரைத்தனர்.