ADDED : ஜன 07, 2025 12:14 AM

விருத்தாசலம்; தமிழக அரசை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் வேல்முருகன், அவைத் தலைவர் ராஜாராம், நகர தலைவர் சங்கர், பொருளாளர் ராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலர் ராஜ்குமார் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் செம்பை, ஜெயக்குமார், சங்கீதா தனசேகர், மாவட்ட பிரதிநிதி பாலா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் புகழ் மணி, கோதண்டபாணி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் தர்மா, மோகன், விருத்தாசலம் நகர இளைஞரணி செயலாளர் சக்கரபாணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி யூஜின் ராஜ், ராஜா, குமரவேல், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நகராட்சி கவுன்சிலர் கருணா நன்றி கூறினார்.