UPDATED : அக் 26, 2026 08:27 PM
ADDED : அக் 26, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், நகராட்சிக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் டேங்க் உள்ளது. இந்த வளாகத்தில் யூகலிப்டஸ், தேக்கு மரங்கள் உள்ளன. இம்மரக்கிளைகள் அருகில் செல்லும் மின் கம்பியில் உராய்ந்தது.
எனவே மின் ஊழியர்கள் அந்த மரக்கிளைகளை கழித்துவிட்டு சென்றனர். மின்வாரிய ஊழியர்கள் சென்ற பிறகு சிலர், அந்த மரங்களை அடியோடு வெட்டி எடுத்து செல்ல முயன்றனர்.
தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்ற போது மரங்களை வெட்டிய இருவர் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை தேடிவருகின்றனர்.
