/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வந்தது
/
புதிய ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வந்தது
ADDED : ஜன 02, 2025 06:59 AM

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சியில் புதிய ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வந்தது.
கெங்கைகொண்டான் பேரூராட்சி கணபதி நகரில் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டது.
இந்நிலையில் புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு அருண்மொழிதேவன் எம்.ஏல்.ஏ., தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா நடந்தது.
நேற்று காலை முதல் புதிய ரேஷன் கடை புதிய கட்டடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் வழங்கினார்.
துணை சேர்மன் பெலிக்ஸ், கவுன்சிலர்கள் தீன்முகமது, நுகர்வோர் அமைப்பு செயலாளர் உன்னிகிருஷ்ணன், ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

