/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 03, 2025 11:11 PM

பண்ருட்டி: பண்ருட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவதிகையில் நடந்தது.
ரோட்டரி சங்க நடப்பு தலைவர் பாலமுருகன், செயலாளர் அருண்ராஜ், பொருளாளர் சுதாமன் வரவேற்றனர். புதிய தலைவராக சதாசிவம், செயலாளராக அருள், பொருளாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் போலியோ ஒழிப்பில் ரோட்டரி சங்கத்தின் பங்கு குறித்து பேசினார். உதவி ஆளுநர் முருகேசன், புதிய உறுப்பினர்களை சால்வை அணிவித்து சங்கத்தில் இணைத்துக் கொண்டார்.
காது கேளாத 10 பேருக்கு காது கேட்கும் கருவிகள், ஏழை எளியோர் 10 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. உதவி ஆளுநர்கள் முத்துகுமரப்பன், மதன்சந்த், காமராஜ், ரவிசேகர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், முன்னாள் ரோட்டரி தலைவர்கள் சண்முகம், வீரப்பன், ஏழுமலை, சீனுவாசன், சண்முகம், பாரதிதாசன், பாலமுருகன், முத்துசுப்ரமணியன், மதிவாணன் பங்கேற்றனர்.