பெ.பொன்னேரியில் புதிய நிழற்குடை கிராம மக்கள் கோரிக்கை
பெ.பொன்னேரியில் புதிய நிழற்குடை கிராம மக்கள் கோரிக்கை
UPDATED : நவ 10, 2026 06:00 PM
ADDED : நவ 10, 2026 05:55 PM
பெண்ணாடம்: பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை கட்ட வேண்டும் என இரு மாவட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி பெ.பொன்னேரி, அம்பேத்கர் நகர் மற்றும் அரியலுார் மாவட்டம், சிலுப்பனுார், சேந்தமங்கலம், செங்கமேடு, மதுராநகர், ஈச்சங்காடு, தளவாய், ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை குடியிருப்பு உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள நிழற்குடை கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை கட்டவில்லை.
விரைவில் தற்போது மழை காலம் துவங்கியதால் நீண்ட துார கிராமங்களில் இருந்து பஸ் ஏற வரும் பயணிகள் திறந்தவெளியில் மழையில் கால்கடுக்க காத்திருந்து பஸ் ஏறும் அவலம் உள்ளது.
எனவே, பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
