ADDED : பிப் 01, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடத்தில் ரூ. 2.35 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.
பெண்ணாடம் துணைமின் நிலையம், மாளிகைக்கோட்டம் பீடரில் குறைந்த மின்னழுத்தம், அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் வார்டு மக்கள், வணிகர்கள் அவதியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பெண்ணாடம், வள்ளியம்மை நகரில் ரூ. 2.35 லட்சம் செலவில் 100 கே.வி.ஏ., திறனுடைய புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
திட்டக்குடி செயற்பொறியாளர் கரிகால்சோழன், பெண்ணாடம் உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்பாதை ஆய்வாளர் சந்திரன், மின்வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர்.