ADDED : ஜூலை 09, 2026 04:07 AM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: வில்லியநல்லூரில் பு.முட்லூர் துணை மின்நிலையம் சார்பில், 63 கே.வி., திறன்கொண்ட புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரில் குறைந்த மின்னழுத்தம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மோட்டார், பேன், கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
பொதுமக்கள் வைத்த பல்வேறு கோரிக்கையையொட்டி, பு.முட்லூர் துணை மின்நிலையம் சார்பில், வில்லியநல்லூர் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, ரூ.9 லட்சம் மதிப்பில் 63 கே.வி., திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த மின்மாற்றி நேற்று முன்தினம் இயக்கி வைக்கப்பட்டது. பு.முட்லூர் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி இயக்கி வைத்தார். உதவி மின்பொறியாளர் அனிதா உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.
