
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில், வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை பஞ்சமியான நேற்று வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு யாகமும், யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு, நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.
வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.

