/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2024 09:43 PM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., தோட்டக்கலை பிரிவு ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் தோட்டக்கலை பிரிவில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி., சுரங்கத்திற்கு வீடு,நிலம் வழங்கிய பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 21ம் தேதி இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 7:00 மணியளவில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு உள்ள சாலையில் அமர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உங்களது கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி.,உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 1:00 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.