/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிலாளி விபத்தில் பலி
/
என்.எல்.சி., தொழிலாளி விபத்தில் பலி
ADDED : டிச 26, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : நெய்வேலி வட்டம் 29 பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 60; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி, நேற்று மாலை 2:00 மணியளவில் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஸ்வீட் கடையில் ஆர்டர் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மந்தாரக்குப்பம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். என்.எல்.சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.