/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில் நுட்ப கண்காட்சி
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில் நுட்ப கண்காட்சி
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில் நுட்ப கண்காட்சி
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில் நுட்ப கண்காட்சி
ADDED : அக் 30, 2025 11:18 PM

கடலுார்:  கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அகாடமி இணைந்து நடத்தும் அணுசக்தி தொழில்நுட்ப கண்காட்சி துவக்க விழா நடந்தது.
கண்காட்சியை கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.  கல்லுாரி முதல்வர் இளங்கோ வரவேற்றார்.
விழாவில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப ஒத்துழைப்பு பொதுவிழிப்புணர்வு மற்றும் விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் மூன்று கட்ட அணுசக்தி திட்டம் குறித்தும், கிராமப்புற மாணவர்களின் எதிர்கால கல்வி வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலைய அறிவியல் விஞ்ஞானி பார்த்திபன், அறிவியல் பாடங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
கண்காட்சியில் அணு ஆராய்ச்சி மைய செயல்பாடுகளை விளக்கும் மாதிரிகள், அணு உற்பத்தி குறித்த பதாகைகளை அரங்கம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற அறிவியல் விஞ்ஞானி கிருஷ்ணமூர்த்தி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன், துணை முதல்வர் ரகு மற்றும் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினர்.
ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சிவசக்தி, உதவி பேராசிரியர் ராஜசேகரன், கணிதத்துறை உதவிபேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

