/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் கைது
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் கைது
ADDED : அக் 30, 2025 11:18 PM

நடுவீரப்பட்டு:  நடுவீரப்பட்டு அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3  பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ்,41; அரசு பஸ் கண்டக்டர்.
இவர்  கடலுாரிலிருந்து பண்ருட்டிக்கு செல்லும் அரசு பஸ் பாலுார், சன்னியாசிப்பேட்டை அருகே நேற்று முன்தினம் இரவு வந்த போது பஸ் டிரைவர் பஸ்சின் தானியங்கி கதவுகளை மூடினார்.
இதனால் ஆத்திரமடைந் த பஸ்சில் பயணம் செய்த முத்துகிருஷ்ணாபுரம் அருண், 20; தனுஷ்,20; பரிசமங்கலம் ஜெயகாந்தன்,22; ஆகிய 3 பேரும் டிரைவரை திட்டினர். இதை கண்டக்டரான ராஜேஷ் தட்டி கேட்டு, பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், தனுஷ், ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் ராஜேஷ் சட்டையை பிடித்து இழுத்து, பஸ்சின் கதவு கண்ணாடி மற்று ம் சைடில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
அருண், தனுஷ் இருவரும் கடலுார் அரசு கல்லுாரியில் படித்து வருகின்றனர். ஜெயகாந்தன் கேட்ரிங் வேலை செய்து வருகிறார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் கண்டக்டர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்அருண், தனுஷ், ஜெயகாந்தன் 3 பேரையும் கைது செய்தனர்.

