ADDED : அக் 15, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : கீரப்பாளையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புல முதல்வர்கள் அம்பேத்கர், அஸ்கர் அலி பட்டேல், நீலகண்டன், நூலகர் பாலகிருஷ்ணன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் செல்வமணி, அனிதா, ஜெயமாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ- மாணவிகளுக்கு உடல் பருமன் மற்றும் மரம் நடுதல் முக்கியத்துவம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.