/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவுளிக்கடையில் மூட்டை துாக்கிய அரசு பள்ளி மாணவர்கள் காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்

ADDED : அக் 15, 2025 01:03 AM

சிதம்பரம் : அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதி மாணவர்களை ஜவுளிக்கடை வேலைக்கு பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் விடுதியில், பல்வேறு தொலைதுாரப்பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட, ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியின் காப்பாளராக, இருந்து வரும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த, ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர், தனது கடையில், தீபாவளி வியாபாரத்திற்கு கொண்டு வரப்பட்ட துணி பண்டல்களை லாரியில் இருந்து இறக்கி வைக்க, விடுதி மாணவர்களை தினமும் இரவு நேரத்தில், மூடப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில், ஏற்றி வந்து, துணி பண்டல்களை இறங்கிய பின்பு, மீண்டும் வாகனத்தில் ஏற்றி பள்ளியில் இறங்கி விட்டு வந்துள்ளார்.
மாணவர்களை அழைத்து வந்து துணி பண்டல்களை இறக்கிவிட்டு, வாகனத்தில் ஏற்றி வந்து, பள்ளி வாயிலில் இறக்கி விடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களை, இரவு நேரத்தில், ஜவுளி பண்டல்களை துாக்கும் வேலைக்கு அழைத்து சென்று, மீண்டும் பள்ளியில் விட்டது தொடர்பாக விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது.