/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் துவக்கம்
/
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 03:19 AM

விருத்தாசலம்,: விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் துவக்க விழா நடந்தது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன், வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் அலுவலர் சுகன்யா, துணை தோட்டகலை அலுவலர் சிவக்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ராஜிவ்காந்தி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் எழிலரசன், பார்த்தசாரதி, ஆதித்யா, பாஸ்கர் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில், கொய்யா, எலுமிச்சை, பப்பாளி அடங்கிய பழச்செடி தொகுப்பு, தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை அடங்கிய காய்கறி விதைத் தொகுப்பு, மரத்துவரை, காராமணி அவரை அடங்கிய பயறுவகை விதை தொகுப்பு ஆகியவைகள் விவசாயிகள் பயிரிடுவதற்கு வழங்கப்பட்டது.