/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் பைப் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
/
குடிநீர் பைப் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 06, 2025 01:49 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே உடைந்த குடிநீர் பைப்பை அதிகாரிகள் சரி செய்யாததால் மக்கள் அவதியடைகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளி அருகே நகராட்சியின் குடிநீர் குழாயில் 10 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் குடிநீருக்கு சிரமபடுவதாக கவுன்சிலர் செல்வகுமார், நகராட்சி அதகிாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
நகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், கவுன்சிலர் செல்வகுமார் முயற்சியால் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், இதுவரை பைப்பை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைகின்றனர். இனியாவது குடிநீர் பைப்பை சரி செய்ய வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.