/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தீ சட்டியுடன் மூதாட்டி தர்ணா
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தீ சட்டியுடன் மூதாட்டி தர்ணா
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தீ சட்டியுடன் மூதாட்டி தர்ணா
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தீ சட்டியுடன் மூதாட்டி தர்ணா
ADDED : ஆக 20, 2025 07:38 AM

விருத்தாசலம் : 'விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மூதாட்டி ஒருவர், தீ சட்டியுடன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி பூங்கோதை, 65; இவர், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தீ சட்டியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், பூங்கோதையிடம் விசா ரணை நடத்தினர்.
அதில், கடந்த 2005ம் ஆண்டு, ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரிடம், மூன்று ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, பூங்கோதை ரூ.1.75 லட்சம் பணம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் பத்திரப்பதிவு செய்யாமல் அந்த நிலத்தை பூங் கோதை பராமரித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு, தங்கராசு இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், பூங்கோதை பராமரித்து வரும் நிலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இந்த பட்டா மாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென, பூங்கோதை வருவாய் துறை அதிகாரிகளிடம், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. பின், பூங்கோதையை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.