ADDED : நவ 21, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி, 55; இவர் இரு தினங்களுக்கு முன், கடலுார்-விருத்தாசலம் மெயின் ரோட்டில், சுப்ரமணியபுரம் பெட்ரோல் பங்க் எதிரே நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

