/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சங்க பட்டாசு கடை திறப்பு
/
கூட்டுறவு சங்க பட்டாசு கடை திறப்பு
ADDED : அக் 27, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு விற்பனை துவங்கியது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழக தொலைதுாரக்கல்வி இயக்குநர் அலுவலகம் அருகில் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, கூட்டுறவு மலிவு விலை பட்டாசு கடை நேற்று திறக்கப்பட்டது.
சரக துணைப்பதிவாளர் ரெங்கநாதன் திறந்து வைத்து முதல் விற்பனை துவக்கி வைத்தார். அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன், சங்க செயலாட்சியர் குமரகுருபரன், சங்க பொது மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.