ADDED : அக் 17, 2025 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில், புறக்காவல் நிலையத்தை எஸ்.பி., திறந்து வைத்தார்.
கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசல், குற்றத்தடுப்பு சம்பவங்களை தடுப்பதற்காக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையேற்று கடலுார் கே.வி.டெக்ஸ் நிதி பங்களிப்புடன், திருவந்திபுரம்- பாலுார் சாலையோரம், கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய புதிய புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டது.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, புறக்காவல்நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார், கே.வி.டெக்ஸ் பொதுமேலாளர், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.