ADDED : ஆக 02, 2025 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : குமராட்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
குமராட்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்து விளக்கேற்றினார்.
விழாவில், மாவட்ட இணைப் பதிவாளர் தனலட்சுமி, சார் பதிவாளர் சேதுராமன், மாவட்ட கணக்கர் சுசீலா, கல்வி குழு உறுப்பினர்கள் சோழன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.