/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
கிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:36 AM

புவனகிரி: புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசின் நேரடி நெல் முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புவனகிரி அடுத்த அம்பாள்புரம், தலைக்குளம், மருதுார் , வடகிருஷ்ணாபுரம், தென்கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குமுடிமூலை, நத்தமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நவரை சாகுபடி ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகளின் கோரிக்கையின் பேரில், கிருஷ்ணாபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
சுற்று பகுதிகளை சென்று விவசாயிகள் இடைத்தரர்களின் அடாவடி இல்லாமல் விற்பனைக்கு நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விதிமுறைகளின் படி வங்கி கணக்கில் நெல் விற்பனைக்கான பணத்தை வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.