ADDED : அக் 25, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
கடலுார்: அப்துல்கலாம், 95வது பிறந்த நாளையொட்டி, பெண்ணையாற்று கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் நாணமேடு கிராமத்தில் அரசு சார்பில் கரை பலப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது.
இந்த கரையோரங்களில் உள்ள மண்மேடுகள் கரையாமல் இருக்க ஓரங்களில் பனை விதைகள் நடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பசுமை முதன்மை விருந்தினர் செல்வநாதன் தலைமை தாங்கி பனை விதை நட்டு துவங்கி வைத்தார்.
நாணமேட்டை சேர்ந்த குமார், நேரு யுவகேந்திரா நற்பணி மன்ற இளைஞர்களும், புதுச்சேரி அப்துல் கலாம் நற்பணி மன்ற இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி ஏழுமலை நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 1000 பனை விதைகளை நடப்பட்டுள்ளது.
