/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசாருக்கு கொடுக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும் பண்ருட்டி டி.எஸ்.பி.,ராஜா உறுதி

ADDED : அக் 07, 2024 07:02 AM

பண்ருட்டி: குற்றங்கள் குறித்து தைரியமாக போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள், உங்கள் தகவல் பாதுகாக்கப்படும் என டி.எஸ்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி.,ராஜா தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் வேலுமணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன்,வெங்கடேசன், கவுரிஅன்பழகன், சண்முகவள்ளிபழனி, ராமலிங்கம் , விஜயா திருமண மண்டப உரிமையாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.எஸ்.பி.,பேசுகையில் திருட்டு குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க தேவையில்லாத அழைப்புகள் மற்றும் 'ஆப்'களில் செல்லவேண்டும். போதை பொருள் ஒழிப்பில் வியாபாரிகள், பொதுமக்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். உங்கள் தகவல் பாதுகாக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்கள்மீதான பாலியல் குற்றங்கள் குறித்தும் தைரியமாக போலீசாருக்கு புகார் செய்யுங்கள் என பேசினார்.