நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், இறந்து கிடந்த பெண் மயிலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு ரேஷன் கடை அருகே நேற்று பெண் மயில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது.
தகவலறிந்த, பிச்சாவரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர்.
இறந்து கிடந்த மயில் பறக்கும்போது மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.