/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பியர்ல்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா
/
பியர்ல்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 25, 2025 07:03 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பியர்ல்ஸ் மழலையர் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
தாளாளர் சாய்சக்தி வரவேற்றார். மேலாளர் ராம்குமார், இயக்குனர் அனந்தபத்மநாபன் முன்னிலை வகித்தனர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கி, பாராட்டினார்.
குழந்தைகள் நல மருத்துவர் இளந்திரையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், குழந்தைகளை வளர்ப்பதிலும், வழிநடத்துவதிலும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள பெரியர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. அவர்களுக்கு அதிக அனுபவம் இருக்கும்.
குழந்தைகள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காலை அதிகமான உணவும், மதியம் அதைவிட குறைந்த உணவும், இரவு மிக குறைந்த சத்தான உணவும் வழங்குவது நல்லது என்றார்.