தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கல் கடத்தியவர் கைது

கூழாங்கல் கடத்தியவர் கைது

கூழாங்கல் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்; கூழாங்கல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்

வடலூர் போலீசார் நேற்று முன்தினம் வடலூர் நான்கு மணி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற டிஎன்-69 ஏஇ- 2559 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்ததில் கள்ளத்தனமாக கூழாங்கல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற விருத்தாச்சலம் நடியப்பட்டு, செட்டி தெருவை சேர்ந்த, பரமசிவம், 38, என்பவரை கைது செய்து, 3 யூனிட் கூழாங்கல், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்த வடலூர், பார்வதிபுரம் வி.ஏ.ஓ., புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், லாரி உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us