/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு

ADDED : ஆக 24, 2025 06:51 AM

பெ ண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி கற்பிப்பது பெற்றோர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
பெண்ணாடத்தில் 1970ம் ஆண்டு அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி துவங்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அன்று முதல் இன்று வரை இப்பள்ளி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் சிறந்த பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாக கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது .
பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக சுந்தர்ராஜன் பணியில் இருந்தார். இவரை, தொடர்ந்து தமிழ்ச்செல்வி, சுபாங்கி, சற்குணாம்பிகை உள்ளிட்டோர் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். கடந்த 2004ம் ஆண்டு 6ம் வகுப்பிற்கு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டது.
தற்போது 6 முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழி கல்வி நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவிகள் படிக்கின்றனர். குறுவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
பேச்சு, கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசுகளை பெற்றுள்ளனர். மாநில போட்டிகளிலும் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானுப்பிரியா, துணை தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் அய்யப்பன், இளையராஜா, ரமேஷ் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.