/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 11, 2026 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் நடராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் காசிநாதன் விளக்க உரையாற்றினார். இதில், 70வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

