ADDED : ஜூலை 28, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்டாலின், ஜோசப் ஸ்டாலினி, இளங்கோ மணி, பரமாநந்தம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கலைமணி வரவேற்றார். மாநில பிரசார செயலாளர் விஸ்வநாதன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் முருகுபாண்டியன், ராஜாராம், ராயப்பா, கார்மேகவண்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் சந்தானராஜ் நன்றி கூறினார்.
