/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
/
மாவட்டத்தில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : அக் 27, 2025 12:10 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் வாயிலாக வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு காவல் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மின்சார வாரியம், தேர்தல் ஆணையம், கல்வித் துறை என, பல்வேறு துறைகள் சார்பில் ஏராளமான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், கடலுார், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, வேப்பூ ர், விருத்தாசலம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையங்கள் உள்ளன.
இதேப் போன்று மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் 'எல்காட்' நிறுவனம் சார்பில் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன.
மத்திய, மாநில அரசு களின் நலத்திட்ட உதவி களை பெற ஆதார் அட்டை அவசியமாகிறது. இதன் காரணமாக தினமும் ஏராள மானோர் புதிதாக ஆதார் அட்டை பதியவும், திருத்தம், முகவரி மாற்றம் கோரியும் விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் மையங்களில் இருந்து கம்ப்யூட்டர், விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு இயந்திரங்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் உட்பட பல்வேறு தாலுகா அலுவலகங்களில் புதிதாக ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. திருத்தம், முகவரி மாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது.
இதனால், புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

