ADDED : அக் 27, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென, கிராம மக்கள் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில், வேப்பூர் அடுத்த பொயனப்பாடி கிராம மக்கள் அளித்த மனு:
பொயனப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மூப்பனார் கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர், பத்திரப் பதிவு செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இந்த பட்டாவை ரத்து செய்து, மூப்பனார் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும், என்று கூறியிருக்கின்றனர்.

