/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்டிஷன் மேளா: 310 மனுக்கள் மீது தீர்வு
/
பெட்டிஷன் மேளா: 310 மனுக்கள் மீது தீர்வு
ADDED : ஏப் 29, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
கடலுாரில் நடந்த பெட்டிஷன் மேளா நிகழ்ச்சியில் 310 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
கடலுார், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய உட்கோட்ட டி.எஸ்.பி., கள் தலைமையில் அந்தந்த போலீஸ்நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வுகாண பெட்டிஷன் மேளா நடந்தது.
கடலுாரில் நடந்த பெட்டிஷன் மேளாவில் எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். மாவட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டதில் 139 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டது. மேலும் 310 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.