ADDED : நவ 04, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  மயானத்திற்கு சாலை வசதி கோரி நத்தப்பட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நத்தப்பட்டு பகுதி மக்கள் அளித்த மனுவில்; நத்தப்பட்டு கிராமத்தில் உள்ள மயானத்திற்கு சாலை வசதி கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலத்தை தனி நபரின் நிலத்தின் வழியாக கொண்டு சென்ற போது, நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

