/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
/
பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
ADDED : நவ 04, 2025 01:29 AM
பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டையில் வாத்தியாப் பள்ளிவாசல் துணை தலைவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை பாத்திமா நகரை சேர்ந்தவர் நசிருதீன், 52; வாத்தியாப் பள்ளிவாசல் துணை தலைவர். இவருக்கும், கிதர்சா மரைக்காயர் தெருவை சேர்ந்த யாசர் அரபாத்திற்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி நசிருதீன் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, யாசர் அரபாத் உட்பட நான்கு பேர், நசிருதீனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, நசிருதீன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் யாசர் அரபாத், அப்பா பள்ளி தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது, அப்துல் கரீம், வாத்தியாப்பள்ளி தெருவை சேர்ந்த முகம்மது இம்தியாஸ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.