ADDED : நவ 04, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  நண்பரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் துறைமுகம் அடுத்த ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர் வாழ்முனி, 32; இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் தீபன் அதிக சத்தத்துடன் மொபைல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதனை வாழ்முனி தட்டிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த தீபன், தனது நண்பர்கள் குரு, 30; மற்றும் தீபக்  ஆகியோருடன் சேர்ந்து வாழ்முனியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.  இது குறித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து குருவை கைது செய்து, மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

