/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு
/
மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி., ஆபீசில் மனு
ADDED : ஆக 24, 2025 07:03 AM

கடலுார் : மிரட்டல் விடுத்த அரசு பஸ் ஊழியர் மீது நடவடிக்கை கோரி மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில், வேப்பூர் அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்த அமரேசன் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்க கடலுார் மாவட்ட செயலாளராக உள்ளேன். கடந்த ஜூன் 28ம் தேதி, நானும், எனது மனைவியும் கள்ளக்குறிச்சியிலிருந்து கடலுார் செல்லும் அரசு பஸ்சில் பயணித்தோம். பணியில் இருந்த கண்டக்டர், பாஸ் செல்லாது எனக்கூறி தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டதால், கண்டக்டரை சஸ்பெண்ட் செய்தனர். இதன் காரணமாக கண்டக்டர், மொபைல் போன் மூலமாக மிரட்டல் விடுத்தார். இவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

