நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி வார்டு 15ல் சுண்ணாம்புக்கார குட்டை பகுதியில் பெஞ்சல் புயல், மழை காரணமாக 30 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.
பாதித்த பகுதியில் அப்பகுதி மக்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வராததால் சிறிது நேரத்தில் அவர்களாகவே கலைந்து சென்றனர்.