ADDED : ஜூன் 22, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெய்வேலியில் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன் சந்தித்து நலம் விசாரித்தார்.
நெய்வேலி என்.எல்.சி., பாரதி விளையாட்டரங்கில் சர்வதேச யோகா தினத்தையொட்டி 5 ஆயிரத்து 800 மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடித்து உணவு சாப்பிட்ட 74 மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.