தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காதலியை ஏமாற்றிய காதலனுக்கு போலீஸ் வலை

காதலியை ஏமாற்றிய காதலனுக்கு போலீஸ் வலை

காதலியை ஏமாற்றிய காதலனுக்கு போலீஸ் வலை


UPDATED : நவ 14, 2026 10:09 PM

ADDED : நவ 14, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 10:09 PM ADDED : நவ 14, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலுார், முதுநகர் ரவீந்திரன் மகன் பவிஷ்,24; இவரும், கடலுார் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்தனர். பவிஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு, காதலியை அழைத்து சென்று நெருங்கி பழகியதால் காதலி கடந்த மே மாதம் கர்ப்பமானார்.

கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக பவிஷ் கூறியதன் பேரில், இளம்பெண் கர்ப்பத்தை கலைத்தார். ஆனால், பவிஷ் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதுகுறித்த கடந்த 8ம் தேதி, அவரது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்ட காதலியை, பவிஷ், அவரது தந்தை ரவீந்திரன், தாய் ஷகிலா, அஜித், ஐஸ்வர்யா ஆகியோர் திட்டி வீட்டில் இருந்து வெளியே துரத்தினர்.

புகாரின் பேரில், பவிஷ், ரவீந்திரன், ஷகிலா, அஜித், ஐஸ்வர்யா ஆகியோர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us