ADDED : செப் 04, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு :நடுவீரப்பட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,70; இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், நடுவீரப்பட்டில் தங்கி பழைய பேப்பர் பொறுக்கி விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை நடுவீரப்பட்டு கடையில் டிபன் வாங்கிக் கொண்டு தில்லை தெருவில் ஒரு வீட்டின் வெளியில் டிபன் சாப்பிட உட்கார்ந்த ராஜேந்திரன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் வி.ஏ.ஓ., நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.