ADDED : ஜூன் 14, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பெயிண்ட் கடைகளில் எத்தனால் விற்பனை குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுதும் சட்ட விரோதமாக எத்தனால், மெத்தனால் விற்பனை நடப்பதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆயில் மற்றும் பெயிண்ட் விற்பனை கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஆயில் மற்றும் பெயிண்ட் விற்பனை கடைகளில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவு போலீசார் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். எத்தனால் மற்றும் மெத்தனால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.